சமூக நலன்புரி அமைப்பானது அவுஸ்திரேலியா மகளிர் இல்லத்தின் நிதியுதவிடன் இன்றைய தினம்(09-11-2024) மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபரின் காரியாலயத்தில் வாழ்வாதார உதவி கோரிய பயனாளிக்கான தையல் இயந்திரத்தினையும், கால் நடையாக பாடசாலை செல்லும் மாணவருக்கான துவிச்சக்கர வண்டியும் வழங்கி வைக்கப்பட்டது.
இந் நிகழ்வில் பிரதம அதிதியாக மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி ஜே.ஜே. முரளிதரன் அவர்களும், சிறப்பு அதிதியாக மட்/ மட்/ஸ்ரீ மாமாங்கேஸ்வரர் வித்தியாலய அதிபர் திரு.T. மணிவண்ணன் அவர்களும் கலந்து சிறப்பித்ததுடன் பயனாளிகளும் அலுவலக ஊழியர்களும் கலந்து கொண்டனர்.
இந்நிகழ்வில் பிரதம அதிதியாக கலந்து கொண்டு உரையாற்றிய மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் நிறுவனத்தினால் செய்யப்படுகின்ற பணிகளை எடுத்துக் கூறியதுடன் நிறுவனத்திற்கு பாராட்டுக்களையும் தெரிவித்தமை குறிப்பிடத்தக்கது.