திருப்பழுகாமம் விவசாய திணைக்களத்தின் களஞ்சியசிலையினை உடைத்து உரம் களவு-அரச அதிகாரிகள் உடந்தையா?




மட்டக்களப்பு மாவட்டம் போரதீவுப்பற்று பழுகாமம் விவசாய திணைக்களத்தில் உள்ள களஞ்சியசாலையினை உடைத்து (26-11-2024)ஆம் தி உரங்கள் களவாடப்பட்டன

விவசாயிகளுக்கு பெரும்போக நெற்செய்கைக்காக வரப்பட்ட உரத்தினை விவசாயிகளுக்கு வழங்கப்படாமை இருந்தமை பழுகாமம் விவசாய திணைக்களத்தின் பெரும்பாக உத்தியோகஸ்தரின் பொறுப்பாகும்

நாட்டில் ஏற்பட்ட வெள்ள அனர்த்தத்தின் போது(26-11-2024)ஆம் திகதி பழுகாமத்தினை சேர்ந்த  அரசியல் கட்சியினை சார்ந்தவர்கள் இருவரின் தலைமையில் இடம் பெற்றன.


இதனை மூடி மறைக்கும் முகமாக பழுகாமம் விவசாய திணைக்களம் களவுக்கு உறுதுனையாக செயப்பட்டிருக்கலாம் என விவசாயிகள் விசனம் தெரிவிக்கின்றன.


சம்பந்தப் பட்டவருக்கு எதிராக தீவிர விசாரணையினை மாவட்ட விவசாய திணைக்களம் மேற்கொள்ள வேண்டும்.

உர களஞ்சிய சாலையினை உடைத்து இன்றோடு நான்கு நாளாகியும் இதனை மூடிமறைக்கும் அரசஅதிகாரிகளுக்கு எதிராக கிராமத்து பொதுமக்களும் விவசாயிகளும் நீதி வேண்டி போராட்டம் மேற்கொள்வோம் என எச்சரிக்கை விடுக்கப்பட்டன.
புதியது பழையவை