கல்முனை வடக்கு ஆதார வைத்தியசாலையின் பணிப்பாளராக வைத்தியர் சுகுணன் நியமிக்கப்பட்டுள்ளார்



வவுனியா மாவட்ட பொது வைத்தியசாலையின் பணிப்பாளராக பணியாற்றிவரும் வைத்திய கலாநிதி வைத்தியர் குணசிங்கம் சுகுணன் அவர்கள், கல்முனை வடக்கு ஆதார வைத்தியசாலையின் பணிப்பாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.

கடந்த காலத்தில் கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளராக கடமையாற்றிய அவர் பின்னர் மட்டக்களப்பிற்கும் தொடர்ந்து வவுனியாவிற்கும் இடமாற்றம் செய்யப்பட்டிருந்தார்.  

கல்முனை பிராந்தியத்தில் கடமையாற்றிய போது அவரது சேவை அளப்பரியதாக அமைந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

எதிர்வரும் 2 ஆம் தேதிக்கு பிறகு அமுலாகும் வண்ணம் இவ் இடமாற்றம் வழங்கப்பட்டுள்ளது.
புதியது பழையவை