பயங்கரவாத தடுப்பு பிரிவினரால் இளைஞன் ஒருவர் கைது!




யாழ்ப்பாணத்தில் பயங்கரவாத தடுப்பு பிரிவினரால் இளைஞன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

முகநூல் பதிவொன்று தொடர்பிலான விசாரணைக்காகவே குறித்த இளைஞன் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

யாழ்ப்பாணம் - இணுவில் பகுதியை சேர்ந்த இளைஞன் ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.


இந்த நிலையில், கைது செய்யப்பட்டவர்  யாழ்ப்பாணத்தில் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.


மேலும், இந்த சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பயங்கரவாத தடுப்பு பிரிவினர் முன்னெடுத்து வருவதாக பொலிஸ் தகவல்கள் தெரிவிக்கின்றன.
புதியது பழையவை