வாக்களிக்க அனுமதிக்கப்படாத ஒரு இலட்சம் தனியார் பணியாளர்கள்




சுமார் 100,000 தனியார் துறை ஊழியர்கள், நாடாளுமன்றத் தேர்தலில் வாக்களிக்க முடியாத நிலைக்கு தள்ளப்பட்டதாக தேர்தல் கண்காணிப்பாளர்கள் மதிப்பிட்டுள்ளனர்.

விடுமுறை எடுக்க முடியாமல் அவர்கள் வாக்களிப்பதை தவிர்த்துள்ளதாக தேர்தல் கண்காணிப்பாளர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

ஜனநாயக மறுசீரமைப்பு மற்றும் தேர்தல் கற்கைகள் நிறுவகத்தின் நிறைவேற்றுப் பணிப்பாளர் மஞ்சுள கஜநாயக்க இந்த தகவலை வெளியிட்டுள்ளார்.


ஊழியர்களிடமிருந்து முறைப்பாடு
இந்த விடயம் தொடர்பில் 12 நிறுவனங்களின் ஊழியர்களிடமிருந்து முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.


எனினும் இதற்கான எதிர் நடவடிக்கைகள் குறித்து அவர் எந்த தகவலையும் வெளியிடவில்லை என கூறப்படுகிறது.
புதியது பழையவை