பொதுஜன பெரமுனவின் மட்டக்களப்பு காரியாலயம் மீது தாக்குதல்!



சிறீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் மட்டக்களப்பு மாவட்டத்தில் போட்டியிட்ட அப்துல் வஹாபின் அலுவலகம் நள்ளிரவு வேளையில் இனந்தெரியதாத நபர்களினால் சேதப்படுத்தப்பட்டுள்ளதாக காத்தான்குடி பொலிஸார் தெரிவித்தனர்.

அலுவலகத்தின் பெனர், ஜன்னல்கள் மற்றும் கண்ணாடிகள் சேதப்படுத்தப்பட்டுள்ளதுடன், அலுவலகத்தினை தீ மூட்ட எடுத்த முயற்சி வெற்றியளிக்கவில்லை என பொலிஸார் தெரிவித்தனர்.

இது தொடர்பான விசாரனைகளை காத்தான்குடி பொலிஸார் ஆரம்பித்துள்ளனர்.

புதியது பழையவை