பாராளுமன்ற உறுப்பினர்களுக்கான உத்தியோகபூர்வ இல்லங்களை வழங்கும் நடவடிக்கை டிசம்பர் 03 ஆம் திகதி முதல் மேற்கொள்ளப்படவுள்ளது.
108 பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு முன்னர் உத்தியோகபூர்வ இல்லங்கள் ஒதுக்கப்பட்டிருந்த நிலையில், சுமார் 30 முன்னாள் எம்.பி.க்கள் தங்களுடைய வீடுகளை ஒப்படைத்துள்ளதுடன் 108 உத்தியோகபூர்வ இல்லங்களில் ஏறத்தாழ 70 வீடுகள் புனரமைக்கப்பட்டு வருவதாகவும் அவர் மேலும் குறிப்பிட்டார்.
இலங்கை கடற்படை மற்றும் இலங்கை இராணுவத்துடன் இணைந்து இலங்கை விமானப்படை மூலம் புனரமைப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றன.
10வது பாராளுமன்றத்திற்கு புதிதாக தெரிவுசெய்யப்பட்ட பாராளுமன்ற உறுப்பினர்களுக்கான உத்தியோகபூர்வ இல்லங்கள் டிசம்பர் 03 ஆம் திகதி முதல் ஒதுக்கப்படும் என செயலாளர் நாயகம் ரோஹணதீர மேலும் வலியுறுத்தியுள்ளார்.
இந்த செயல்முறை நாளை மறுநாள் சட்டப்பூர்வமாக தொடங்கப்படலாம் என்றாலும், நடந்துகொண்டிருக்கும் புனரமைப்பு பணிகள் காரணமாக கால அவகாசம் எடுத்துக் கொள்ளப்பட்டுள்ளது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.