தற்போது வங்காள விரிகுடாவில் இலங்கைக்கு அருகாகவும் அந்தமான் தீவுகளுக்கு அருகாகவும் இரண்டு காற்றுச் சுழற்சிகள் உள்ளன.
இதனால் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களின் பல பகுதிகளுக்கும் தற்போது கிடைக்கும் மழை எதிர்வரும் (12-11-2024 )வரை தொடரும் வாய்ப்புள்ளது.
அதே வேளை இம்மழைப் பொழிவின் போது இடையிடையே இடி மின்னல் நிகழ்வுகளும் இடம்பெறும் என்பதனால் இடி மின்னல் தொடர்பில் மிகவும் அவதானமாக இருப்பது அவசியம்.
அதேவேளை இம் மாதத்தில் இன்னமும் இரண்டு தாழமுக்க நிகழ்வுகள் தோன்றும் வாய்ப்புள்ளது.
அதேவேளை எதிர்வரும்( 23-11- 2024) அன்று தாழமுக்கம் ஒன்று உருவாகும் வாய்ப்புள்ளது. தற்போதைய நிலைமைகளின் படி இது ஒரு புயலாக மாற்றம் பெறும் வாய்ப்புள்ளது.
அவ்வாறு மாற்றம் பெற்றால் அது வடக்கு மாகாணம் நோக்கியே நகரும் வாய்ப்புள்ளமை குறிப்பிடத்தக்கது.
எனினும் இது வங்காள விரிகுடாவின் கடல் மேற்பரப்பு வெப்பநிலையை பொறுத்து மாற்றமடையவும் வாய்ப்புள்ளது.
-நாகமுத்து பிரதீபராஜா-