தமிழரசுக்கட்சி மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள சில உறுப்பினர்களுக்கு ஜனாதிபதி தேர்தலில் கட்சி முடிவை மீறியதற்கு எதிராக விளக்கம் கோரி பதில் பொதுச்செயலாளர் ப. சத்தியலிங்கம் (24-12-2024)திகதி குறிப்பிட்டு கடிதங்கள் அனுப்பியுள்ளார்.
இந்த கடித்த்தில் மாவட்ட குழுவில் முடிவு எடுத்ததாக குறிப்பிடப்பட்டுள்ளது.
மாவட்ட குழு செயலாளர் ஞா. ஶ்ரீநேசனிடம் கேட்டபோது இப்படி எந்த தீர்மானமும் எடுத்ததாக இல்லை என கூறினார்.
அடுத்த விடயம் வடக்கு கிழக்கில் எட்டுமாவட்டத்தில் உள்ள பல தமிழரசுக்கட்சி உறுப்பினர்கள் ஜனாதிபதி தேர்தலில் தமிழ் பொதுவேட்பாளருக்கே நேரடியான பிரசாரங்களை முன்எடுத்தும், மேடைகளில் ஏறி பேசியும் பிரசாரம் செய்து இருந்தனர் ஏனைய மாவட்ட உறுப்பினர்கள் எவருக்கும் இவ்வாறு சத்தியலிங்கம் கடிதம் அனுப்பவில்லை ஏன்?
அவருடைய வவுனியா மாவட்டத்தில் உள்ள தமிழரசுக்கட்சி உறுப்பினர்கள் சங்கு சின்னத்தை ஆதரித்தது அவருக்கு தெரியாதா என்பது ஒருவிடயம் அடுத்த விடயம் ஜனாதிபதி தேர்தல் இடம்பெற்றது 21.09.2024, ல் அதன்பின்னர் பொதுத்தேர்தல் இடம்பெற்றது 14.11,2024, ல் இந்த விளக்கம் கேட்கப்பட்ட அனைவரும் பொதுத்தேர்தலில் தமிழரசுகட்சிக்கே ஆதரவு தெரிவித்தனர்.
இது எந்த வகையில் நியாயம்?
ஒருவேளை பொதுத்தேர்தலுக்கு ஜனாதிபதி தேர்தல் நடந்த கையோடு இப்படியான விளக்க கடிதம் எழுதாமல் அவர் கோமாவிலா இருந்தார்.
இது எல்லாமே மட்டக்களப்பில் சிங்கள புத்தா தனிநபரான சாணக்கியனின் முதிர்ச்சியற்ற கருத்துக்கு மத்தியகுழுவில் உள்ள சிலர் தாளம் போட்டு நாடகம் ஆடுவது இதன்மூலம் உறுதியாய் தெரிகிறது.
இதன் எதிரொலி எதிர்வரும் உள்ளூராட்சி சபை தேர்தலில் தமிழரசுகட்சிக்கு மட்டக்களப்பு மாவட்டத்தில் பாரிய வீழ்ச்சியை தரும் என தெரிகிறது.