மட்டடக்களப்பு கல்முனை சாலை வழியே மட்டக்களப்பு பகுதியிலிருந்து களுவாஞ்சிகுடி நோக்கி பயணித்துக்கொண்டிருந்த மோட்டார்சைக்கிளும் அதே திசையில் பயணித்துக்கொண்டிருந்த மகேந்திரா நிறுவன தயாரிப்பான சிறியரக வட்டா வாகனமும் செட்டிபாளையம் பகுதியில் வைத்து முன் பின் மோதி விபத்துக்குள்ளானது.
இவ் விபத்து இடம்பெற்ற சமயம் மோட்டார்சைக்கிளில் இரண்டு இளைஞர்கள் பயணித்துள்ள நிலையில் ஒரு இளைஞனின் கை உட்பட்ட பகுதிகளில் பலத்த காயம் ஏற்பட்டுள்ளதுடன் இன்னும் ஒரு இளைஞனுக்கும் சிறியளவிலான காயம் ஏற்பட்டுள்ளது.
மோட்டார்சைக்கிள் முன்னால் பயணித்துக்கொண்டிருந்த சமயம் பின்னால் பயணித்த மகேந்திரா நிறுவன தயாரிப்பான சிறியரக வட்டாவின் ரயர் திடீரென வெடித்ததன் காரணமாகவே வட்டா மோட்டார்சைக்கிளுடன் மோதி வீதியை விட்டு அருகிலிருந்த வீட்டு மதில்வரை இழுத்துச் சென்று இந்த விபத்து சம்பவித்திருக்கிறது.
இந்த சிறியரக வட்டா மாமாங்கம் பகுதியை சேர்ந்தவர்களுடையது என சொல்லப்படுகிறது அதே வேளை மோட்டார்சைக்கிளில் பயணித்து காயமடைந்த இளைஞர்கள் மகிழூர் பகுதியைச் சேர்ந்தவர்கள் என தெரிவிக்கப்படுகிறது.
விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை களுவாஞ்சிகுடி போக்குரத்து பொலிஸார் முன்னெடுத்துச் செல்கின்றனர்.