தம்பி சாணக்கியா.... உமக்கு அரியம் ஜயாவின் வரலாறு தெரியுமா? அல்லது உனது குரு சுமந்திரனுக்கு தெரியுமா?



உமக்கு அரியம் ஜயாவின் வரலாறு தெரியுமா? அல்லது உனது குரு சுமந்திரனுக்கு தெரியுமா?
இல்லை உமக்கு செம்பு தூக்கும் சொப்பனசுந்தரி,நீலக்கட்சில இருந்து வந்த சரவெடிபவன், வெங்காயம்,போன்ற கொத்துரொட்டிகளுக்குத்தான் புரியுமா?

இன்று உம்மைப்போன்ற அரசியல் வாதிகள் வேட்டிகட்டி தமிழலசுக்கட்சியில் முகவரி கொடுத்த மனிசன் அரியம் ஐயா எண்டது உமக்கு தெரியாது நீ 90, ம் ஆண்டு பிறந்தவன் சோனி, சிங்களவனோட சகவாசம் வைத்து நாட்டை விட்டு அவுஷ்ரேலியாவில் களியாட்டம் ஆடிய நீ கோடிகொடுத்து தமிழரசுக்குள்வந்தவன்.
நீ மகிந்தமாமாட வெற்றிலையில 2015, எலக்சனில் பிள்ளையானோட சேர்ந்து கேட்டு 575, வோட்டமட்டும் எடுத்த நீ இந்த கட்சிலவந்துதானே எம் பி ஆகினாய்.
தம்பி சாணக்கியா.

2010,காலம் மட்டக்களப்புல தமிழ் கூட்டமைப்புல எலக்சனில் நிற்க எவரும் வராமல் பிள்ளையான், கருணாட பயத்தால் ஒழுச்ச காலம் துரை ஐயா போன்றவர்கள் ஓடி ஒழித்தபோது அரியம் ஐயாதான் தைரியமாக முன்வந்து செல்வராசா அண்ணருக்கும் தைரியத்த ஊட்டி அந்த எலக்சனில தமிழலசுகட்சிட மானத்த காத்தவர்தான் இந்த அரியம் ஐயா.

2009, க்கு பிறகு எவருமே பயம்காரணமாக மாவீரர் நாள் நினைவுகள், முள்ளிவாய்க்கால் நினைவுகள், கொக்கட்டிச்சோலை படுகொலை நினைவுகள், சத்துருக்கொண்டான் படுகொலை நினைவுகள் என சகல நினைவுகளையும் துணிந்து முன் நின்று செய்தவரலாறு உமக்கு தெரியுமா சின்னத்தம்பி.
எங்கட பட்டிப்பளை பிரதேச தமிழரசுகட்சி கிளையை மட்டக்களப்பு மாவட்டத்தில் முதன்முதலாக 2011, ம் ஆரம்பித்தவர் இந்த அரியம் ஐயாதான்.

அது கூட இப்போ நன்றிகெட்ட பட்டிப்களை பிரதேச தமிழரசுகட்சி தலைவர்,உறுப்பினர்கள் மறந்து நடிப்பு அரசியலில் செயல்படுவதை பார்த்து என்ன சொல்வதென்றே தெரியவில்லை. நன்றிகெட்ட நயவஞ்சகர்களின் நடத்தை தமிழலசுகட்சி பிரதேசசபை வாற எலக்சனில நல்ல பாடம் படிப்பார்கள்.

இன்னொரு உண்மை சொல்லுறன் கேழுங்கள் 2012, மட்டக்களப்பில் தமிழரசுகட்சி மாநாடு நடத்த இருந்த போது அதை தடுக்க தேவநாயகம் மண்டபத்தில பிள்ளையான் குண்டுவச்சபோது செல்வராசா ஐயா,யோகேஷ்வரன் ஐயா இன்னும் சிலருக்கு தெம்பு கொடுத்து அந்த மாநாட்ட மட்டக்களப்பு அமரிக்க மெசன் மண்டபத்தில நடத்தக்குள்ள பிள்ளையான் சவப்பெட்டியோட த தடுத்து எங்கட பட்டிப்பளை கலைஞர்களை அழைத்து நடனம் வைத்து அந்த மாநாட்ட சிறப்பா நடத்தின பெருமை அரியம் ஐயாவையே சாரும் இப்படி உசிர பணயம் வைத்து எத்தனையோ நிகழ்வுகள நடத்தின ஒரு கொள்கை வாதிதான் அரியம் ஐயா.

மத்தியகுழு உறுப்பினர்களிடம் நான் ஒன்றை கேட்கிறேன் துணிவு இருந்தால் பதில் தாருங்கள்.

அரியம் ஐயா ஜனாதிபதி தேர்தலில ஒரு கொள்கை தமிழராகத்தானே போட்டியிட்டு இரண்டு இலட்சத்துக்கு மேலே வாக்கு எடுத்தார் அவருக்கு விசாரணை, கட்சியில இருந்து விலக்குவது என்ரால் அவருக்கு வாக்களித்த அந்த இரண்டு இலட்சம் தமிழர்களையும் உங்களால் விலக்க முடியுமா?
துரத்த முடியுமா?
அவரை ஆதரித்த மாவை ஐயாவுக்கு வழங்கிய அரசியல் குழு தலைவர் பதவியை பறிக்க முடியுமா?
அவரை ஆதரித்து இப்போ எம் பியாகிய சிறிதரன் ஐயா, ஶ்ரீநேசன் ஐயா, குகதாசன் ஐயா,கோடிஷ்வரன் ஐயா இவங்களுக்கு எலக்சன்கேட்க சத்தியலிங்கம் பொதுச்செயலாளர்தீனே வேட்பு மனுவில பையொப்பம் இட்டார் அப்படியானால் சத்தியலிங்கம் முகத்தை மறைத்தா கையொப்பம் இட்டார் இந்த செயலாளருக்கு அல்லவா ஒழுக்காற்று விசாரணை செய்ய வேண்டும் இதுக்கு மத்தியகுழு பெருமனிதர்கள் என்ன சொல்லப்போகிறீர்கள்?


அரியம் ஐயாவை எதிர்த உனது சுமந்திரன் குரு, சயந்தன், மேஜர் சரவணன், மேஜர் ஆனோல்ட், சேயோன், கலையரசன், சத்தியலிங்கம் , நிதான்சள், எல்லோரும் கூண்டோடு தோல்வி அடைந்தது எதற்காக?
எப்படி இவர்கள் அத்தனைபேரையும் மண்கவ்வ வைத்தனர்?
இதில் இருந்தும் பாடம் படிக்காமல் கொள்கைவாதிகளை எல்லாம் கட்சியில் இருந்து நீக்கிப்போட்டு நீங்கள் விரும்பும் சிங்கள தேசியத்தை வடக்கு கிழக்கில் வேர் ஊன்ற வைக்கப்போறீர்களா?

மனச்சாட்சியை தொட்டுச்சொல்லுங்கள் நீங்கள் தனி ஒரு அரியம் ஐயாவை கட்சியில் இருந்து விலக்கவில்லை அவருடன் சேர்ந்து இரண்டு இலட்சம் தமிழர்களையும் விலக்குகிறீர்கள் என்ற உண்மையை எதிர்வரும் உள்ளூராட்சி,மாகாணசபை தேர்தலில் உணருவீர்கள் நாங்கள் உணரவைப்போம்.
இதைவிட எனக்கு வேறு ஒன்றும் சொல்ல இயலாது.



ந.உதயகுமார்
உதயகுமார் பவுண்டேசன்
முனைக்காடு
புதியது பழையவை