மட்டக்களப்பில் சுற்றுலாத்துறையை மேம்படுத்துவது தொடர்பிலான விசேட கலந்துரையாடல்!



மட்டக்களப்பில் சுற்றுலாத்துறையை மேம்படுத்துவதற்கான  முதலிட்டாளர்களுடனான விசேட கலந்துரையாடல் மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் ஜஸ்டினா முரளிதரன் தலைமையில் மாவட்ட செயலக மண்டபத்தில் இன்று (11-12-2024) திகதி இடம் பெற்றது.

நவீன மயப்படுத்தப்பட்ட செயற்திட்டங்களின் மூலம் உள்ளூர் மற்றும் வெளிநாட்டு சுற்றுலா பயணிகளை கவர்வதற்கு தொழில் முயற்ச்சியாளர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட திட்ட முன்மொழிவுகள் தெளிவூட்டப்பட்டதுடன் மாவட்டத்தில் சுற்றுலாத் துறையை மேம்படுத்துவதற்கான திட்டங்கள் தொடர்பாக இதன் போது விரிவாக கலந்துரையாடப்பட்டது.

மேலும் சுற்றுலா அபிவிருத்தி வேலைத்திட்டங்கள் மேற்கொள்ளும் போது எதிர்நோக்கும் சவால்கள்  தொடர்பாக இதன் போது  முதலீட்டாளர்கள் கருத்துகளை பகிர்ந்துகொண்டனர்.

இந் நிகழ்வில் மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் திருமதி சுதர்ஷினி ஸ்ரீகாந்த், மண்முனை மேற்கு பிரதேச செயலாளர் திருமதி நமசிவாயம் சத்தியானந்தி,  உதவி மாவட்ட செயலாளர் ஜி.பிரணவன், மண்முனை வடக்கு உதவி பிரதேச செயலாளர் சுபா சதாகரன், மாநகரசபை பொறியியலாளர்,  பிரதி திட்டமிடல் பணிப்பாளர்களான ரி.நிர்மலன், வி.நவநீதன், மாவட்ட சுற்றுலாத் துறை அபிவிருத்தி உத்தியோகத்தர் எஸ்.ஏ.விவேகானந்தராஜ், அரச அரசசார்பற்ற நிறுவனங்கள், முதலிட்டாளர்கள்  என பலர் கலந்து கொண்டனர்.


புதியது பழையவை