கிழக்கு மாகாண அமைச்சுக்களுக்கு புதிய செயலாளர்களை ஆளுனர் நியமித்தார்.



கிழக்கு மாகாண அமைச்சுக்களின் செயலாளர்களை கிழக்கு மாகாண ஆளுனர் பேராசிரியர் ஜயந்தலால் இரத்னசேகர மாற்றம் செய்துள்ளார்.

மாகாண பொதுச்சேவை ஆணைக்குழுவின் செயலாளராக கடமையாற்றிய எம்.வை.பைசால் மாகாண முதலைமைச்சின் செயலாளராக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

மாகாண பொதுச் சேவை ஆணைக்குழுவின் செயலாளராக J.லியாகத் அலி நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

மாகாண விவசாய அமைச்சின் செயலாளராக கடமையாற்றிய எம்.எம்.நஸீர் மாகாண வீதி அபிவிருத்தி அமைச்சின் செயலாளராக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

மாகாண கல்வி அமைச்சின் செயலாளராக கடமையாற்றிய எச்.ஈ.எம்.டப்ளியூ.ஜி.திசாநாயக்கா விவசாய அமைச்சின் செயலாளராக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

மாகாண ஆளுனரின் செயலாளராக கடமையாற்றிய எல் பி.மதன்னாயக்கா சுகாதார அமைச்சின் செயலாளராக  நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

கிழக்கு மாகாண சுகாதார அமைச்சின் பதில் செயலாளராக கடமையாற்றிய எம்.சிவலிங்கம் அவரது நிரந்தர பதவியான மட்டு.மாநகர ஆணையாளராக கடமையாற்ற பணிக்கப்பட்டுள்ளார்.

இதேவேளை கிழக்கு மாகாண முதலமைச்சின் பதில் செயலாளராக கடமையாற்றிய என்.மணிவண்ணன் அவரது நிரந்தர பதவியான மாகாண உள்ளூராட்சி ஆணையாளர் பதவிக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளார்.

கல்வி அமைச்சு, ஆளுனரின் செயலாளரின் நியமனங்கள் பற்றி பின்னர் அறிவிக்கப்பட உள்ளது.
புதியது பழையவை