மட்டக்களப்பு கொக்கட்டிச்சோலை பொதுச் சந்தை 4 வருடங்களின் பின் திறந்துவைப்பு!



மட்டக்களப்பு கொக்கட்டிச்சோலை பொதுச் சந்தை இன்றிலிருந்து பொது மக்களின் பயன்பாட்டுக்காக திறந்துவைக்கப்பட்டது. 

வாரத்தில் சனிக்கிழமை மாத்திரம் இயங்கும் நிலையில் கட்டமைக்கப்பட்டதுடன். மண்முனை தென்மேற்கு பிரதேச சபையினர் நிர்வகித்து வருகின்றனர்

மட்டக்களப்பு படுவான் நிலப்பரப்பில் இயங்கிய பழமையான பொதுச்சந்தையாகவும் பெரும்பாலான மக்கள் பாவனைக்கு உட்படுத்திய சந்தையாகவும் இருந்து கொரோனா காலத்தில் ஏற்பட்ட பாதுகாப்பற்ற நிலையை தொடர்ந்து செயற்பாடிழந்த பொதுச்சந்தையால் மக்கள் பெரும் சிக்கல்களை எதிர்நோக்கினர். 

இதனை கருத்தில் கொண்டு பெரும் முயற்சிகளை மேற்கொண்ட மண்முனை தென்மேற்கு பிரதேச சபையினரினதும் பிரதேச இளைஞர்களின் அயராத முயற்சியால் பொதுச்சந்தையானது இன்று  (11/01/2025) ஆம் திகதி  காலை திறந்துவைக்கப்பட்டது.

கன மழை இன்று பெய்துகொண்டிருக்கின்ற நிலையிலும் காலையிலிருந்து மக்கள் வருகை தந்து பொருட்கொள்வனவில் ஈடுபடுவதை அவதானிக்கமுடிந்தது.



புதியது பழையவை