மட்டக்களப்பு மாவட்டத்தின் பட்டிருப்பு கல்வி வலயத்திற்கு உட்பட்ட பாடசாலைகளில் 2025 ஆம் ஆண்டு முதலாம் தரத்திற்கு மாணவர்களை பாடசாலைக்கு சேர்க்கும் போது 3000 ரூபாய் கட்டாயம் கட்டணம் அறவிடப்படுகின்றது.
மீண்டும் பாடசாலையினை அலங்கரிக்க 2000ரூபாய் பணம் அறவிடப்படுகின்றது.
அதுமாத்திரம்மன்றி கட்டாயம் பெற்றோர்கள் வேலைக்கு போகனுமாம்....இல்லாவிட்டடால் பணம் கட்ட வேனுமாம்...
இவ்வாறான சட்டம் இலங்கை நாட்டில் ஜனாதிபதியி மற்றும் கல்வி அமைச்சின் உத்தரவினை மீறிச்செய்யும் செயப்பாடாகும்.
நாட்டில் எத்தனையோ குடும்பங்கள் வேலை இல்லை கஷ்டப்பட்டு பெற்றோர் இல்லாமல் வாழும் மாணவர்கள் 5000ரூபாய் பணம் எவ்வாறு கட்ட முடியும்.
இவ்வாறு அரச பாடசாலையில் கட்டாயப்படுத்தி பணம் அறவிடப்படுவதனால் ஏன் பற்றுச்சீட்டு வழங்க முடியாது.
பற்று சீட்டு வழங்க முடியாமல் மறைமுகமாக பெற்றோர்களை பண வாங்கி தரும் படி அதிபர் ஆசிரியர்கள் கட்டாயப்படுத்து கின்றார்கள்
நாட்டின் ஜனாதிபதி பிரதமர் இப்வாறு முதலாம் தரத்திற்கு மாணவர்களை பாடசாலைக்கு சேர்ப்பதில் பெற்றோர்கள் மிகவும் கஷ்டப்படுகின்றனர்.
பல பாடசாலைகளில் மாணவர்கள் கஷ்டத்தின் மத்தியில் இடைவிலகி செல்கிறார்கள்.
(Clean sri lanka ) என்று நாட்டை சுத்தம் செய்வோம் என வாக்குறுது வழங்கிய ஜனாதிபதி அவர்கள்
அரசாங்க பாடசாலைகளில் 2025 ம் ஆண்டுக்கான முதலாம் தரத்திற்கும், ஆறாம் தரத்திற்கும் மாணவர்கள் அனுமதிக்கும் போது பாடசாலைகளில் கட்டணம் அறவிடுவது நன்கொடைகள், பரிசுப்பொருட்களை, கோருவது தண்டனைக்குரிய குற்றமும், சட்டவிரோதமானது என கல்வி அமைச்சு சகல பாடசாலைகளின் அதிபர்களுக்கும் எச்சரிக்கை விடுத்துள்ளது.
பாடசாலைகளுக்கு முதலாம் தர மாணவர்களை அனுமதிக்கும் தேசிய நிகழ்வுகள் ஜனவரி 31 ம் திகதி ஏககாலத்தில் நாடளாவிய ரீதியில் இடம்பெறவுள்ளதால் கல்வி அமைச்சு இவ்வெச்சரிக்கையை விடுத்துள்ளது.
பாடசாலைகளில் கல்வி அமைச்சினால் அங்கீகரிக்கப்பட்ட வசதிகள் சேவை கட்டணம், பாடசாலை அபிவிருத்திச் சங்கத்துக்கான அங்கத்துவப் பணம் தவிர்ந்த வேறு எவ்வகையான கட்டணத்தையும் அறவிடுவதற்கான அங்கீகாரம் கல்வி அமைச்சினால் வழங்கப்படவில்லையெனவும் கல்வி அமைச்சு அறிவித்துள்ளது .
இதேபோல் ஆறாம் தரத்திற்கு மாணவர்களை அனுமதிக்கும் போதும் எவ்வித கட்டணங்களையும் அறவிடக்கூடாது.
பாடசாலைகளுக்கு நிதி உதவியை பெறும் நோக்கில் பழைய மாணவர் சங்கம், பாடசாலை அபிவிருத்திச்சங்க உறுப்பினர்கள் மூலம் மாணவர் அனுமதியை மையமாகக் கொண்டு பெற்றாரிடம் நிதி அறவிட்டினையோ , பரிசுப் பொருள்களையோ, நன்கொடைகளையோ அதிபர்கள் கோரக்கூடாது எனவும் கல்வி அமைச்சு மேலும் அறிவித்துள்ளது.
மாணவர்களின் அனுமதிக்காக பணம் கோரிய சில அதிபர்கள் சேவையில் இருந்து நீக்கப்பட்டு அவர்களுக் கெதிராக சட்ட , நீதிமன்ற நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதையும் அமைச்சு நினைவுபடுத்தியுள்ளது.
மாணவர் அனுமதிக்காக நிதி அறவீடு அல்லது பொருள் நன்கொடை கோரும் அதிபர்கள்,பாடசாலை பழைய மாணவர், அபிவிருத்திச் சங்க உறுப்பினர்கள் தொடர்பாக கல்வி அமைச்சின் துரித இல.1911 மற்றும் இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவின் துரித இல.1954 ஆகிய இலக்கங்களுடன் தொடர்பு கொண்டு தகவல்களை வழங்க முடியும்.
பாதிக்கப்பட்ட பெற்றோர்கள் சமுக நலன் விரும்பிகள் தெரிவிக்கின்றன