கொழும்பிலிருந்து பசறை நோக்கிப் பயணித்துக்கொண்டிருந்த 99ஆம் இலக்க வழித்தட பஸ், பசறை – 10ஆவது மைல்கல் பகுதியில், இன்று(11-01-2025) காலை 06.30 மணியளவில் விபத்துக்குள்ளானதில், 13 பேர் காயமடைந்துள்ளனர்.
சாரதிக்கு ஏற்பட்ட தூக்கக் கலக்கமே இந்த விபத்துக்குக் காரணமாகியுள்ளதென்று தெரியவருகிறது.
சாரதியின் தூக்கக் கலக்கம் காரணமாக, பஸ்ஸின் பின் பகுதி வீதியை விட்டு விலகி, பள்ளத்தை நோக்கி வழுக்கிச் சென்று, வீதியருகேயுள்ள மரமொன்றில் மோதி நின்றுள்ளது.
சம்பவத்தில் காயமடைந்த 13 பேரும், பசறை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அவர்கள் ஆபத்தான நிலையில் காணப்படவில்லை என்று, பொலிஸார் தெரிவிக்கின்றனர்.