மட்டக்களப்பில் குழு மோதல் - பலர் வைத்தியசாலையில் அனுமதி!



மட்டக்களப்பு வாழைச்சேனை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட செம்மண்ணோடைப் பிரதேசத்தில் நேற்றிரவு 10 மணியளவில் இடம்பெற்ற குழு மோதலில் இதுவரை இரு தரப்பிலும் பலர் வாழைச்சேனை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில், ஒரு சிலர் மேலதிக சிகிச்சைக்காக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளனர்.

சம்வம் தொடர்பில் தெரிய வருவதாவது


இப்பிரதேசத்தில் அதிகரித்துள்ள இரவு நேர வேக மோட்டார் சாவரி ஈடுபடும் இளைஞர் குழுவுக்கும் மற்றுமொரு ஆட்டோ சாரதி ஒருவருக்குமிடையில் இடம்பெற்ற வாய்த்தர்க்கம் வாக்குவாதமாக மாறி குழு மோதலாக இடம்பெற்றுள்ளதாகத் தெரிய வருகின்றது.

இதன் போது இடம்பெற்ற கைகலப்பின் போதே இரு குழுக்களிலும் பலர் காயமடைந்து வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இது தொடர்பில் இரு குழுக்களினாலும் வாழைச்சேனை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளதுடன், மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
புதியது பழையவை