இதனால் இரு தரப்புக்குள் பிணக்கு ஏற்பட்டு ஆட்டின் உரிமையாளரான குறித்த பெண் இணக்க சபைக்கு சென்று உள்ளார்.
இணக்க சபையில் நாயை செல்லப்பிராணியா பாசமாக வளர்த்த பெண் மிகவும் வறுமைக்கோட்டுக்கு உட்பட்ட பெண். அவருக்கு எதிர் தரப்புக்கு பணம் கொடுக்கும் அளவுக்கு வசதியும் இல்லை. இதனால் அவர் மீது இணக்க சபையில் புகார் கொடுத்த ஆட்டின் உரிமையாளரான பெண் தனக்கு குறித்த நாயை தரும்படி இணக்க சபை அதிகாரிகளிடம் கேட்க அவர்களும் நாயின் உரிமையாளர் பெண்ணிடம் பக்கத்து வீட்டு ஆட்டின் உரிமையாளர் ஆட்டுக்கு பதில் நாயை கேட்க சம்மதித்து பக்கத்து வீடு தானே அது வந்து போகும் என்று நினைத்து கொடுத்துள்ளார்.
இணக்க சபையில். ஆனால் ஆட்டின் உரிமையாளரான பெண் அந்த நாயை கொண்டு போய் வளர்க்காமல் குறித்த செல்லப்பிராணியை தூக்கில் போட்டு கொலை செய்துள்ளார் அதை நாயின் உரிமையாளர் படம் எடுத்துள்ளார்.
இது தான் உண்மை..!
மாங்குள மக்களுக்கு ஒட்டிசுட்டானில் தான் இணக்கசபை இருக்கிறது.