மட்டக்களப்பு மண்முனை தென் எருவில் பற்று பிரதேச செயலக பொங்கல் விழா



மட்டக்களப்பு மாவட்டம் மண்முனை தென் எருவில் பிரதேச செயலகம் நடத்திய 2025ம் ஆண்டிற்கான பிரதேச பொங்கல் விழா (26-01-2025)ஆம் திகதி குருக்கள்மடம் அருள்மிகு செல்லக்கதிர்காம சுவாமி ஆலய முன்றலில் பிரதேச செயலாளர் சிவப்பிரியா வில்வரெத்தினம் அவர்களது தலைமையில் வெகு சிறப்பாக இடம்பெற்றது. 

இப் பொங்கல் விழாவில் பொதுமக்கள் மாணவர்கள் பிரதேச செயலக உத்தியோகத்தர்கள் பிரதேச கிராம கலைஞர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.











தமிழரது வாழ்வியலோடும் பண்பாட்டோடும் ஒன்றிணைந்து இருக்கின்ற தைத்திருநாள் உலகெங்கும் வாழ்கின்ற தமிழர்களால் கொண்டாடப்பட்டு வருகின்றது. 

இத் தைப்பொங்கல் திருநாளை மண்முனை தென் எருவில் பற்று பிரதேச செயலகமும் வருடா வருடம் பெரு விழா எடுத்து கொண்டாடி வருவது குறிப்பிடத்தக்கது.

அந்த வகையில் இம் முறை பிரமாண்ட ஏற்பாடுகளுடன் பொங்கல் விழாவை பண்பாட்டு ரீதியாக முன்னெடுத்திருந்தது. 

அந்த வகையில் உழவுத் தொழிலுடன் தொடர்புடைய புதிர் எடுத்தல் நிகழ்வுடன் வைபவ ரீதியான நிகழ்வுகள் ஆரம்பமானது அந்த வகையில் மட்டக்களப்பு செட்டிபாளையம் மாங்காடு கட்டுப்பிள்ளையார் ஆலயத்தில் புதிர் எடுப்பதற்கான பூர்வாங்க ஏற்பாடுகள் இடம்பெற்று செட்டிபாளையம் ஸ்ரீலஸ்ரீ கண்ணகை அம்மன் ஆலய வயல் வெளியில் நெல் அறுவடை செய்யப்பட்டு பிரதான நிகழ்வு நடைபெறும் குருக்கள்மடம் செல்லக்கதிர்காமர் சுவாமி ஆலம் நோக்கி பல வகையான பண்பாட்டு கலாசார நடனங்களுடன் பண்பாட்டு ஆடையணிந்து மேள தாளங்கள் மற்றும் பறை இசை ஒலிக்க பவணியாக எடுத்துவரப்பட்டது.



எடுத்துவரப்பட்ட நெற் கதிர்கள் குருக்கள்மடம் செல்கக்கதிர்காம சுவாமி ஆலயத்தில் விசேட வழிபாடியற்றப்பட்டு சூடடித்தல் நிகழ்வும் பின் நெல் தூற்றுதல் நிகழ்வும் இடம்பெற்று பின் இடித்து புத்தரிசியாக்கப்பட்டு புதுப்பானையில் பொங்கலிடுகின்ற பிரதான நிகழ்வு இடம்பெற்றதுடன் 20 மேற்பட்ட குழுக்கள் பொங்கலிடும் நிகழ்வில் கலந்து சிறப்பித்தனர்.

இப் பிரதேச பொங்கல் விழா பல தரப் பட்ட ஏற்பாடுகளுடன் ஒரே நேரத்தில் பல நிகழ்வுகள் இடம்பெறுவதாக ஏற்பாடு செய்யப்பட்டு ஏற்பாட்டுக்குழுவால் நடத்தப்பட்டது. பிரதான நிகழ்வு அரங்கில் பல நடனங்கள் இசை வாத்திய ஆற்றுகையுடன் இடம்பெற மறு பக்கம் கோலப் போட்டி மாலை கட்டும் போட்டி என்பன கலாசார போட்டியாக இடம்பெற்ற மறு பக்கம் கலை கலாசார விளையாட்டுக்கள் என பல நிகழ்வுகள் ஒரே நேரத்தில் இடம்பெற்றது.

வரலாற்று பொங்கல் விழாவை பிரதேச செயலக வரலாற்றில் வரலாறு காணாத விழாவாக நடார்த்திய பிரதேச செயலாளர் மற்றும் அதனோடு இணைந்த பிரதேச செயலக உத்தியோகத்தர்கள் பிரதேச கலைஞர்களுக்கு எமது பாராட்டுக்கள்.







புதியது பழையவை