மட்டக்களப்பில் வௌ்ளத்தில் காணாமல் போன இருவரது உடலங்களும் மீட்பு!



சீரற்ற வானிலை காரணமாக ஏற்பட்ட திடீர் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்ட இருவரது உடலங்களும் கண்டெடுக்கப்பட்டுள்ளது.

மட்டக்களப்பு வாழைச்சேனை புலிப்பாஞ்சிக்கல் பகுதியில் சனிக்கிழமை (25-01-2025) மாலை இரண்டு பேர் வெள்ளத்தில் அடித்துச்செல்லப்பட்டு காணாமற்போனதாக வாழைச்சேனை பொலிஸில் முறைப்பாடு செய்யப்பட்டிருந்தது.

சந்திவெளி பகுதியைச்சேர்ந்த 52 மற்றும் 71 வயதுடைய இருவரே காணாமற்போயிருந்தனர்.

இந்த இருவரும் காய்கறிகளைச்சேகரித்து விட்டு வயல்களிலிருந்து திரும்பிக்கொண்டிருந்த போது புலிப்பாஞ்சிகல் ஓயாவின் அடித்துச்செல்லப்பட்டதாக விசாரணைகளில் தெரிய வந்துள்ளது.

காணாமற்போன இருவரது உடலங்களும் தற்போது மீட்கப்பட்டு அகீல் எமேர்ஜென்ஸி வாகனத்தின் உதவியுடன் பிரேத பரிசோதனைக்காக வாழைச்சேனை ஆதார வைத்தியசாலையில் ஒப்படைக்கப்பட்டுள்ளதுடன், வாழைச்சேனை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.
புதியது பழையவை