செய்தி சேகரிக்க சென்ற ஊடகவியலாளர் - சசி புண்ணிய மூர்த்திக்கு பிடியாணை



மட்டக்களப்பு மயிலத்தமடு மேச்சல் தரை மீட்பு போராட்டத்தில்
மயிலத்தமடு மேச்சல் தரை மீட்பு விடயமாக ஜனாதிபதிக்கு ரணிலுக்கு எதிராக கடந்த (08-09-2023) ல் கொம்மாதுறையில் கவன ஈர்ப்பு போராட்டம் மீதான வழக்கு இன்று (22-01-2025) எடுத்துக்கொள்ளப்பட்டு மீண்டும் 9, வது தவணை (21-04-2025), ல் ஒத்திவைக்கப்பட்டது.

குறித்த போராட்டத்தை செய்தி அறிக்கையிட சென்ற இரண்டு ஊடகவியலாளர்களுக்கு எதிராகவும் ஏறாவூர் பொலிஸார் வழக்கு தாங்கள் செய்து இருந்தனர்.

தொடர்ச்சியாக மட்டக்களப்பு மாவட்டத்தில் அச்சுறுத்தலுக்கும் பொலிஸாரின் விசாரணைக்கும் உட்படுத்தப்பட்டிருந்த நிலையில் தற்காலிகமாக நாட்டை விட்டு வெளியேறிய ஊடகவியலாளர் சசி புண்ணியமூர்த்திக்கு  நாட்டில் இல்லாத காரணத்தால் அவருக்கு எதிராக பிடியாணை பிறப்பித்ததுடன் குடிவரவு குடியல்வு திணைக்களத்திற்கும் அவரின் விபரத்தை அனுப்புமாறும் பணிக்கப்பட்டது

30, பேருக்கும் ஒரு இலட்சம் சரீர பிணை வழங்கப்பட்டது.
பிணையாளிகளுடன் ஒருவாரத்துக்குள் நீதிமன்றில் தனித்தனியாக பிணையாளிகளுடன் பதிவு செய்யுமாறு கால காலவகாசம் வழங்கப்பட்டது.
புதியது பழையவை