மட்டக்களப்பில் இளைய சகோதரனின் கத்திக்குத்து இலக்காகி மூத்த சகோதரர் மரணம்



வாழைச்சேனை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பிறைந்துரைச்சேனை சாதுலியா வித்தியாலய வீதியைச்சேர்ந்த நபரொருவர் இன்று (22-01-2025) காலை கத்திக்குத்துக்கு இலக்காகி மரணமடைந்துள்ளார்.

தமது இளைய சகோதரனுடன் ஏற்பட்ட வாய்த்தர்க்கமே கொலைக்கான காரணமென முதற்கட்ட விசாரணையில் தெரிய வருகின்றது.

மரணமடைந்தவர் 48 வயதுடைய முஸம்மில் என அடையாளங் காணப்பட்டுள்ளதுடன், குத்திய சந்தேக நபரான இளைய சகோதரன் தலைமறைவாகியுள்ளார்.

மரணமடைந்தவரின் உடல் வாழைச்சேனை ஆதார வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதுடன், மேலதிக விசாரணைகளை வாழைச்சேனை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி திரு லசந்த பண்டாரவின் பணிப்பின் பேரில் பெருங்குற்றத்தடுப்பு பிரிவு பொறுப்பதிகாரி திரு தினேஷ் (8656) தலைமையிலான குழுவினர் மேற்கொண்டு வருகின்றனர்.
புதியது பழையவை