மட்டக்களப்பில் ஆயிரம் பூக்களை நடுவோம் சங்கத்தின் விற்பனை கண்காட்சி!



மட்டக்களப்பில் ஆயிரம் பூக்களை (சுவாகாஸ்) நடுவோம் சங்கத்தின்  இரு நாள் விற்பனை கண்காட்சியானது மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி ஜஸ்டினா முரளிதரன் தலைமையில் புதிய மாவட்ட செயலகத்தில் (27-01-2025) திகதி ஆரம்பித்து வைக்கப்பட்டது..

பேராதனை தேசிய தாவரவியல் திணைக்களத்தின் அனுசரணையில்  நாடளாவிய ரீதியில் மேற்கொள்ளப்படும் செயற் திட்டமானது மட்டக்களப்பு
பாடுமீன்கள் சுவாகாஸ் அழகு தாவர பூக்கள் வளர்ப்பு சங்கத்தின் தலைவர் வி.சுதாகரன் ஏற்பாட்டில் இடம் பெற்றது.




அழகு தாவரங்களை வளப்போரின் வாழ்வாதாரத்தை மேம்படுத்துவதற்கும் உற்பத்திகளை விற்பனை செய்வதற்குமான சந்தை வாய்ப்பாக இந் நிகழ்வு அமைந்துள்ளது.

இதன் போது அழகு தாவரங்களை வளர்ப்பதற்கான ஆலோசனைகள் மற்றும் வழிகாட்டுதல்களை கிழக்கு மாகாண பூங்கா அபிருத்தி உத்தியோகத்தர் திருமதி எஸ்.கார்த்திகாவினால் வழங்கப்பட்டது.

இந் நிகழ்வில் உதவி  மாவட்ட செயலாளர் ஜீ.பிரணவன், மாவட்ட விவசாய பணிப்பாளர் எம்.எப்.சனீர், தேசிய உரச் செயலக மாவட்ட பணிப்பாளர் கே.எல்.எம்.சிராஜுதின் மற்றும் பல உயரதிகாரிகள் என பலர் கலந்து கொண்டனர்.






புதியது பழையவை