மட்டக்களப்பு பெருங் குற்றத்தடுப்பு பொலிஸ் பிரிவின் பொறுப்பதிகாரி தலைமையில் கொக்கட்டிச்சோலை பொலிஸ்பிரிவுக்குட்பட்ட மண்முனை பாலத்தை அண்டியதான களப்பு பகுதியில் இயங்கிவந்த பாரிய கசிப்பு உற்பத்தி நிலையம் இன்று(28-01-2025) பிற்பகல் சுற்றிவளைக்கப்பட்டு பெரும் தேடுதல் வேட்டையின் பின் பெருமளவு கசிப்பு உற்பத்தி பொருட்களும் கசிப்பும் கைப்பற்றப்பட்டது
இந்த சுற்றி வளைப்பில் கசிப்பு உற்பத்திக்கு பயன்படுத்தப்பட்ட பெருமளவு பொருட்களும் கசிப்பு கைப்பற்றப்பட்டது அந்த வகையில் 4140000 ml வடிசாராயமும் அதனை களஞ்யப்படுத்த பயன்படுத்திய
07 வூளிகளும் பெருமளவான இறப்பர் போத்தல்களும் தோணி ஒன்றும்
வறல்கள் 24 ( கோடாவுடன்) கைப்பற்றப்பட்டது.
கைப்பற்றப்பட்ட அனைத்து பொருட்களும் மேலதிக விசாரணைகளுக்காக கொக்கட்டிச்சோலை பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டன.