சற்று முன்னர் நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா கைது!



இலங்கை   நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா சற்று முன்னர் அனுராதபுர பொலிஸாரால் இன்று மை (29-01-2025) கைது செய்யப்பட்டுள்ளார்.

இந்த கைதானது அநுராதபுரம் பொலிஸாரால், யாழ்ப்பாணம் - சாவகச்சேரி நகராட்சி மன்றத்தில் வைத்து முன்னெடுக்கப்பட்டது.  


கடந்த வாரம் நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா  நாடாளுமன்றம் செல்கையில்  அனுராதபுரத்தில்  போக்குவரத்து  பொலிஸாருடன் முரண்பட்டதை அடுத்து அவருக்கு எதிராக  பொலிஸார் வழக்கு தாக்கல் செய்திருதனர்.






அதேவேளை நாடாளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா இராமநாதன், வடக்கு மாகாண வேலையில்லா பட்டதாரிகள் சங்கத் தலைவர் உள்ளிட்ட ஐவரை நாளைய தினம் (30-01-2025) நீதிமன்றத்தில் ஆஜராகுமாறு அழைப்புக் கட்டளை அனுப்ப யாழ்ப்பாணம் நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளமை  குறிப்பிடத்தக்கது.
புதியது பழையவை