இலங்கை ஜனாதிபதி அவர்களால் 2025 ஆம் ஆண்டிற்காக முன்வைக்கப்பட்ட " Clean SriLanka" வேலைத்திட்டத்தின் ஒரு பகுதியாக பராமரிப்பின்றி காணப்பட்ட மட்டக்களப்பு போரதீவுப்பற்று பிரதேசசபையின் விவேகானந்தபுரம் வெல்லாவெளி பொது மயானத்தை
துப்பரவு செய்யும் வேலைத்திட்டம் நேற்று 2025-02-01 ஆம் திகதி பிரதேச சபையின் செயலாளர் எஸ். பகீரதன் தலைமையில் நடைபெற்றது.
இந் நிகழ்வில் சனசமூக அபிவிருத்தி உத்தியோகத்தர் மற்றும் சபையின் உத்தியோகத்தர்கள், ஊழியர்கள் அனைவரும் கலந்து கொண்டிருந்தனர்.