கிளீன் சிறிலங்காவில் இந்து மதத்தையும் துடைத்தெறிய நினைக்கும் வேலைத்திட்டம் ஹபரணையில் நடந்தேறியுள்ளது.
ஹபரணை பிரதான வீதியால் பயணம் செய்யாதவர்கள் இருக்கமாட்டீர்கள் அப் பிரதேசத்தில் வீதியின் மருங்கில் பழமையான விநாயகர் ஆலயம் ஒன்று உள்ளது. பயணிகள் அங்கு வழிபாடு செய்து செல்வது வழக்கம்.
தற்போது விநாயகர் ஆலத்தின் முன்னால் பேருந்து தரிப்பிடம் அமைக்கப்பட்டு விநாயகர் ஆலயம் முழுமையாக மறைக்கப்பட்டு குறிகிய காலத்தில் அது அகற்றப்படும் நிலையும் உருவாகியுள்ளது.
இதற்கான கண்டனத்தினை ஒன்றிணைந்து வெளிப்படுத்த வேண்டும். அத்தோடு விநாயகர் ஆலயத்தினை இந்த அரசாங்கம் புனர்நிர்மானம் செய்ய வேண்டும்.