பிரபல தொழிலதிபரும் 'தினக்குரல்' பத்திரிகையின் ஸ்தாபகருமான எஸ்.பி. சாமி தனது 89ஆவது வயதில் காலமானார்.
சமூக மற்றும் சமயப் பணிகளில் எஸ்.பி. சாமி ஈடுபாடுடையவர் என்பது குறிப்பிடத்தக்கது.
வயது மூப்பின் காரணமாக நேற்று முன் (18-02-2025) இரவு அவர் காலமானார் என்று குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர்.
இறுதிக்கிரியைகள்
அன்னாரின் இறுதிக்கிரியைகள் பற்றிய தகவல் பின்னர் அறிவிக்கப்படும் என்றும் குடும்பத்தினர் மேலும் குறிப்பிட்டுள்ளனர்.