உயிர் பயத்தை காட்டிய துப்பாக்கி சூட்டு சம்பவம் -பாதாள உலக கும்பலைச் சேர்ந்த 'கணேமுல்ல சஞ்சீவ' உயிரிழப்பு!



பாதாள உலக கும்பலைச் சேர்ந்த 'கணேமுல்ல சஞ்சீவ' என்று அழைக்கப்படும் சஞ்சீவ குமார என்பவர் துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகி உயிரிழந்துள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

கொழும்பு - புதுக்கடை நீதிமன்ற வளாகத்தில் துப்பாக்கிச் சூடு இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இந்த துப்பாக்கிச் சூட்டில் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றவாளியாக கருதப்படும் கனேமுல்ல சஞ்சீவ கொல்லப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.



கனேமுல்ல சஞ்சீவவை விசாரணை நடவடிக்கைகளுக்காக பூஸா சிறைச்சாலையிலிருந்து புதுக்கடை நீதிமன்றத்திற்கு அழைத்துவரப்பட்ட சந்தர்ப்பத்திலேயே துப்பாக்கிச் சூடு இடம்பெற்றுள்ளதாக தெரியவருகிறது.

அதேவேளை , துப்பாக்கி பிரயோகத்தை மேற்கொண்டவர் சட்டத்தரணியின் தோற்றத்தில் வருகைதந்திருந்ததாகவும் கூறப்படுகிறது.
புதியது பழையவை