மட்டக்களப்பு மண்ணுக்கு பெருமை சேர்த்த மண்முனை வடக்கு கலாசார மத்திய நிலைய மாணவர்கள்



இன்று (04-02-2025)அனுட்டிக்கப்பட்ட இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் 77 வது சுதந்திர தினக் கொண்டாட்டத்தின் பிரதான நிகழ்வு ஜனாதிபதி தலைமையில் இடம்பெற்ற நிலையில் இவ் சுதந்திர தின கொண்டாட்டத்தின் ஒரு அம்சமாக நாட்டில் வாழ்கின்ற இனங்களின் கலாசார பிரதிபலிப்பான நடன ஆற்றுகைகள் ஒன்றிணைந்த மாபெரும் ஆற்றுகை நிகழ்வாக இடம்பெற்றிருந்தது இந்த நடன ஆற்றுகையில் தமிழர் கலாசாரத்துடன் இணைந்ததான பரத நாட்டிய ஆற்றுகையினை மட்டக்களப்பு   மண்முனை வடக்கு கலாசார மத்திய நிலையத்தின் நடனத் துறையில் பயிலும் மாணவிகள் ஆற்றுகை செய்து எமது மட்டக்களப்பு மாவட்டத்திற்கு பெருமையினை தேடிக்கொடுத்தனர்.



 

 குறித்த பரதநாட்டிய ஆற்றுகையினை  மண்முனை வடக்கு கலாசார மத்திய நிலைய  நடன துறைசார் வளவாளர் திருமதி. ஷர்மிளதா பிரபாகரன் அவர்கள் நெறிப்படுத்தியிருந்தமை குறிப்பிடத்தக்கது. 

தொடர்ந்து 5து வருடமாகவும் மண்முனை வடக்கு கலாசார மத்திய நிலையம் பரதநாட்டிய ஆற்றுகையினை சுதந்திர தின தேசிய நிகழ்வில் ஆற்றுகை செய்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

நடன ஆற்றுகையினை நிகழ்த்திய மாணவிகளுக்கும் நெறிப்படுத்தியவர்களுக்கும் ஒருங்கிணைத்த நிலைய பணிப்பாளருக்கும் எமது வாழ்த்துக்களையும் பாராட்டுக்களையும் தெரிவிக்கின்றோம்.
புதியது பழையவை