கிராம சேவர்கள் தங்கள் அலுவலகத்தில் இருக்க வேண்டிய நேரம் குறித்து புதிய சுற்றறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.
அதன்படி, கிராம சேவர்கள் பின்வரும் நேரங்களில் அலுவலகத்தில் இருக்க வேண்டும்.
செவ்வாய் மற்றும் புதன் கிழமைகளில் காலை 8:30 மணி முதல் மாலை 4:15 மணி வரை.
சனிக்கிழமைகளில் காலை 8:30 மணி முதல் மதியம் 12:30 மணி வரை.
கிராம சேவர்கள் இந்த நேரங்களில் பொதுமக்களுக்கு அலுவலகத்தில் இருந்தே சேவைகளை வழங்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
இந்தத் தகவலை அனைவரும் அறிந்துகொள்ளும் வகையில் பகிருமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.