மட்டக்களப்பு வாழைச்சேனைப் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட புனாணை, ஓமடியாமடு கிராமத்தில் நேற்று (04-02-2025) செவ்வாய்க்கிழமை இரவு பொல்லால் தாக்கப்பட்டு ஒருவர் கொலை செய்யப்பட்டுள்ளதாக வாழைச்சேனை பொலிஸார் தெரிவித்தனர்.
ஓமடியாமடு கிராமத்தைச்சேர்ந்த 63 வயதான செல்லையா சுந்தரலிங்கம் எனும் ஐந்து பிள்ளைகளின் தந்தையே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
சகோதரர்களுக்கிடையில் ஏற்பட்ட கை கலப்பு சண்டையாக மாறியுள்ளது.
இந்நிலையில், அதனை விலக்கச்சென்ற போது குறித்த கொலை இடம்பெற்றுள்ளதுடன், சகோதரனால் இத்தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக பொலிஸ் தெரிவித்தனர்.
மட்டக்களப்பு பொலிஸ் குற்றத்தடுப்புப்பிரிவினர் சம்பவ இடத்திற்கு நேரில் சென்று விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.
பிரேத பரிசோதனைக்காக உடலம் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதுடன், மேலதிக விசாரணைகளை வாழைச்சேனை பொலிஸார் மேற்கொண்டு, சந்தேக நபர்களைக் கைது செய்வதற்கான நடவடிக்கைகள் மேற்கொண்டுள்ளனர்.