இலங்கையின் 77ஆவது சுதந்திரதினம் நேற்று(04-02-2025)ஆம் திகதி போரதீவுப்பபற்று பிரதேசசபை செயலாளர் எஸ்.பகீரதன் தலைமையில் இடம் பெற்றன.
1948, பெப்ரவரி மாதம் 4ஆம் திகதி இதேபோன்றதொரு நாளில் 132 ஆண்டு கால பிரித்தானியரின் ஆட்சி முடிவுக்குக் கொண்டு வரப்பட்டு, சுதந்திரம் பிரகடனப்படுத்தப்பட்டது.
இதன்படி இலங்கையின் 77ஆவது சுதந்திர தின பிரதான நிகழ்வுகள் போரதீவுப்பற்று பிரதேசசபை செயலாளர் தலைமையில் தேசியக்கொடி ஏற்றப்பட்டு தமிழில் தேசியகீதம் இசைக்கப்பட்டன.
அதனைத் தொடர்ந்து செயலாளரினால் இலங்கையின் 77ஆவது சுதந்திர தின உரை இடம் பெற்றன.