சுகாதார சேவையில் ஆட்சேர்ப்பு தொடர்பாக அரசின் நிலைப்பாடு



இலங்கையில் எதிர்காலத்தில் சுகாதாரத் துறையில் வேலைவாய்ப்புகளுக்காக பல ஆட்சேர்ப்புகள் செய்யப்பட உள்ளதாக சுகாதார மற்றும் வெகுஜன ஊடக அமைச்சர் வைத்தியர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார்.

இன்று (06-03-2025) நாடாளுமன்றத்தில் அவர் இதனைத் தெரிவித்தார்.

இதன்படி, இந்த மாத நடுப்பகுதிக்குள் 976 குடும்ப சுகாதார சேவை அதிகாரிகளுக்கு நியமனங்கள் வழங்கப்படும் என்று அமைச்சர் தெரிவித்தார்.

மார்ச் மாத நடுப்பகுதிக்குள் 238 பொது சுகாதார ஆய்வாளர்கள், 65 மருந்தாளுநர்கள், 43 தொழில் சிகிச்சையாளர்கள் மற்றும் 41 கதிரியக்க வல்லுநர்கள் நியமிக்கப்படுவார்கள் என்று அவர் மேலும் கூறினார்.

ஏப்ரல் மாதத்தில் 3,147 செவிலியர் அதிகாரிகளுக்கு நியமனங்கள் வழங்கப்படும் என்றும் அவர் கூறினார்.

மே மாதத்திற்குள் 1,000 உதவியாளர்களை நியமிக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்திருந்தார்.
புதியது பழையவை