தபால் திணைக்களத்தில் நிலவும் பல்வேறு பிரச்சினைகளுக்கு தீர்வு வழங்குமாறு கோரி மட்டக்களப்பு தபால் திணைக்கள ஊழியர்கள் ஒன்றிணைந்து
கவன ஈர்ப்பு போராட்டம் ஒன்றினை மாவட்ட தபால் அலுவலகத்திற்கு முன்னால் முன்னெடுத்திருந்தனர்.
போராட்டத்தில் ஈடுபட்ட ஊழியர்கள் பதவியுயர்வுகளை உடனே வழங்கு மற்றும் தபால் திணைக்கள புதிய நியமன முறையை உடன் அமுல்படுத்து எமது அமைச்சு உறுதியளித்த விடயங்களை உடன் நடைமுறைப்படுத்து உள்ளிட்ட கோரிக்கைகள் அடங்கிய பதாதைகளை ஏந்தி ஆர்ப்பாட்டத்தை முன்னெடுத்தனர்.