கிடப்பில் போட்ட,கைவிடப்பட்ட அபிவிருத்திகள் மிகவிரைவில் ஆரம்பித்து வைக்கப்படும் -பிரதி அமைச்சர் அருண் ஹேமச்சந்திரா


(நிருபர்-க.விஜயரெத்தினம்)

மட்டக்களப்பு களுவாஞ்சிகுடியில் நடைபெற்ற உள்ளுராட்சி தேர்தல் பரப்புரைக்கூட்டம் நாடாளுமன்ற உறுப்பினர் கந்தசாமி-பிரபு தலைமையில் நடைபெற்றபோது பிரதியமைச்சர் பிரதம அதிதியாக கலந்துகொண்டு உரையாற்றுகையில் இவ்வாறு குறிப்பிட்டார்.



பிரதியமைச்சர் தொடர்ந்து உரையாற்றுகையில்..


நாட்டிலே அரசியல் ரீதியான மாற்றம் ஒன்று ஏற்பட்டுள்ளது.இது சாதாரண விடயமல்ல.பின்தங்கிய கிராமத்தில் இருந்து ஒருவர் ஜனாதிபதியாக வந்துள்ளார்.நாட்டு மக்களின் எண்ணத்தைப் பாருங்கள்.ஊழல் மோசடிகளுக்கும்,குற்றச்செயல்களை கட்டுப்படுத்துவதற்கும் நாட்டுமக்கள் அரசியலில் மாற்றத்தை காணுவதற்கு எடுத்த முயற்ச்சிதான் செப்ரெம்பர் நாட்டில் ஏற்பட்ட மாற்றமாகும்.

இது சர்வசாதாரணமான விடயமல்ல.கடந்த ஆட்சியாளரால் நடாத்தப்பட்ட சம்பிரதாயமான அரசியலுக்கு முற்றுப்புள்ளி வைத்து புதிய அரசியல் கலாச்சாரத்தை நாட்டுமக்கள் ஏற்படுத்தி இருக்கின்றார்கள்.அதுவொரு சிறப்பான அரசியல் மாற்றமாகும்.அதனூடாக சிறியதொரு அமைச்சரவையை நாங்கள் உருவாக்கியுள்ளோம்.






ஆனால் கடந்த ஆட்சியை ஏற்படுத்திய ஜனாதிபதிகள் விசாலமான அமைச்சரவையை உருவாக்கி,மக்களின் பணத்தைக்கொண்டு,எதுவிதமான திட்மிடல் இல்லாமல் சொகுசு,ஆடம்பர வாழ்க்கை வாழ்ந்து காட்டியிருக்கின்றார்கள்.வாக்களித்த மக்களை கொஞ்சம் கவனத்தில் எடுக்காமல் சுகபோக வாழ்க்கை வாழ்ந்து ஆட்சி செய்திருக்கின்றார்கள்.

இதனால் நாட்டின் பொருளாதாரம் வீணாக்கப்பட்டுள்ளது.நாடு அதாளபாதாலத்துக்கு சென்று நாட்டிலே மோசமான ஆட்சி நிலவியது.நாட்டுமக்கள் பொருளாதாரத்தில் சிக்குண்டு நாளாந்தம் அல்லல்பட்டார்கள்.ஒருபிடி சோற்றுக்காக மற்றவர்களிடம் கையேர்ந்த வேண்டிய நிலைக்குள்ளாக்கப்பட்டார்கள்.இதனால் பலர் தற்கொலை செய்யவேண்டிய நிலையேற்பட்டுள்ளது.

இதனை கருத்திற்கொண்டுதான் நாட்டுமக்கள் அனைவரும் தேசிய மக்கள் சக்தியில் இணைந்து புதிய அரசியல் கலாச்சாரத்தை ஏற்படுத்தி தந்திருக்கின்றார்கள்.அந்தமாற்றம் இன்னும் பல வருடங்கள் நீடிக்கும்.



இதனை பொறுத்துக்கொள்ளாத எதிர்கட்சிகள் எங்களைப்பார்த்து ஊழை விட்டு கத்திக்கதறுகின்றார்கள்.எங்களின் ஆட்சி ஒருமாதம் என்றுதான் சொன்னார்கள்,பின்னர் இரண்டுமாதம் என்று ஊழையிட்டார்கள்.இரண்டுமாதங்கள் நான்கு மாதங்களாக நீடித்து இப்போது ஆறு மாதங்களை எட்டியுள்ளது.இவர்களின் கதறல்களை கண்டு தேசியமக்கள் சக்தி அஞ்சி ஓடிஒழியாது.படிப்படியாக நாட்டிலே மாற்றத்தை ஏற்படுத்துவோம்.எதிர்வரும் தேர்தலுக்கு பின்னர் இவர்களின் கனவுகள் பலிக்காமல் அரசியல் செய்வதில் மட்டுப்படுத்தப்படும்.அரசியல் செய்யும் களம் மக்களால் இல்லாமற்போகும்.மக்கள் நலன்சார்ந்த பிரச்சனைகள்தான் நாங்கள் செய்வதைத்தவிர புதிய பிரச்சனை ஒன்று எங்களுக்கு எழாது.நாட்டிலே எங்கள் ஆட்சியில் சிறந்த நிருவாக கட்டமைப்பை உருவாக்கி கொலை,கொள்ளை,ஊழல்,இலஞ்சம் இல்லாத மக்களை பாதுகாத்து மக்களை வாழவைக்கும் அரசியல் கலாச்சாரம் உருவாக்கப்படும்.

மக்களின் வரிப்பணத்தை கொள்ளையடித்து சுகபோகமாக,ஆடம்பரமாக வாழும் மோசமான அரசியல் கலாச்சாரம் ஒழிக்கப்படும்.அதற்காகத்தான் உள்ளுராட்சி மன்றங்களில் தேசிய மக்கள் கட்சியின் வேட்பாளரை நிரப்பி ஊழலை ஒழிப்பதற்கு திட்டமிட்டுள்ளோம்.அதற்காக திசைகாட்டிக்கு வாக்களித்து தேசிய அபிவிருத்தியில் நாட்டுமக்கள் இணைந்திருங்கள்.இதன்மூலம் கைவிடப்பட்ட, கிடப்பில் காணப்படும் அபிவிருத்தி வேலைத்திட்டங்கள் மீண்டும் ஆரம்பிக்கப்படும்.



கடந்த ஆட்சியில் பன்முகப்படுத்தப்பட்ட நிதியாக ஒரு அமைச்சருக்கு 5கோடி ரூபா ஒதுக்கினாலும் அதில் பல இலட்சக்கணக்கான நிதி வசூலிக்கப்பட்டது.அவ்வாறான ஊழல்வாதிகள் எங்கள் ஆட்சியில் இல்லை.நிதி ஒதுக்கினாலும் பொதுமக்கள்,பொது அமைப்புக்கள்,பிரதேச செயலாளர்கள்,அரசாங்க அதிபர்களின் சரியான முன்மொழிவுடன் அடையாளப்படுத்தி நிதி ஒதுக்கீட்டின் மூலம் வேலைத்திட்டத்தை செய்து முடிப்போம்.



கடந்த ஜனாதிபதிகளின் ஆட்சியில் பாதுகாப்புபடைகள் அதிகமாக காணப்பட்டாலும் எங்கள் ஆட்சியில் ஜனாதிபதியின் பாதுகாப்பு குறைக்கப்பட்டுள்ளது.வாகனங்களின் எண்ணிக்கையும் குறைவடைந்துள்ளது.பாதுகாப்பு கெடுபிடிகள் இல்லை.தேர்தலுக்கான உலங்கு வானூர்தி பயன்படுத்துவது இல்லை.ஜனாதிபதிக்கான வாகன எரிபொருள் 2500 லீற்றரில் இருந்து அது 700 லீற்றறாக குறைக்கப்பட்டு மக்களின் பணம் சேமிக்கப்பட்டு நாட்டை சிறந்ததொரு நாடாக,ஊழலற்ற நாடாக,அமைச்சரவை குறைந்த நாடாக மாற்றி அமைப்போம்.கல்லறை முதல் கருவறை வரையும் நாட்டு மக்களினது தேவைகள் ஊழல் இல்லாமற் செய்வதற்கு திசைகாட்டிக்கு வாக்களியுங்கள் எனத்தெரிவித்தார்.
புதியது பழையவை