வீட்டில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த முச்சக்கர வண்டி தீப்பற்றி எரிந்து முற்றாக சேதம்



வெலிகந்த கட்டுவன்விலயில் வீட்டுக்கு முன்பாக கராஜினுள் நிறுத்திவைக்கப்பட்டிருந்த முச்சக்கர வண்டியொன்று இன்று (29-04-2025) அதிகாலை (நள்ளிரவு) 02.00 மணியளவில் திடீரென தீப்பற்றி எரிந்து முற்றாக சேதமடைந்துள்ளதுடன் முச்சக்கர வண்டிக்கு அருகில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த மோட்டார் சைக்கிள் ஒன்றும் தீச்சுவாலையினால் சிறு சேதங்களுக்குள்ளாகியுள்ளது.



முச்சக்கரவண்டி உரிமையாளர் வீட்டில் உறங்கிக்கொண்டிருந்த வேளை இத் தீ விபத்து நடந்துள்ளதுடன் அதிக வெப்பத்தினால்  கராஜின் கூரை (அஸ்பெஸடாரா சீட்) வெடித்துச் சிதறிய சப்தம் கேட்டதையடுத்து அயலவர்கள் வெளியே வந்து பார்த்தபோது இச்சம்பவத்தை கண்ணுற்றுள்ளதுடன் முச்சக்கரவண்டி உரிமையாளர் மற்றும் அயலவர்கள் சேர்ந்து தீயைக் கட்டுப்படுத்தியுள்ளனர்.

வெலிகந்தை பொலிஸாருக்கு இதுபற்றி முறைப்பாடு செய்யப்பட்டு பொலிஸார் சம்பவ இடத்துக்கு இன்று காலை வருகைதந்து வாக்குமூலம் பதிவுசெய்தனர்.

இச் சம்பவத்திற்க்கு அரசியல் பழிவாங்கலோ தனிப்பட்ட கோபதாபங்களோ காரணமில்லை எனவும் , வாகனத்தில் சுயமாக ஏற்பட்ட கோளாறுகாரணமாகவே இது இடம்பெற்றுள்ளதாக உரிமையாளர் பொலிஸாருக்கு வாக்குமூலம் அளித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

இச்சம்பவத்தில் தீக்கிரையான முச்சக்கர வண்டி முன்னாள் பிரதேச சபை உறுப்பினர் கே.ஐ.எம். சுல்தான் அவர்களின் மூத்த மருமகன் முபாறக் என்பவருக்கு சொந்தமானதாகும்.
புதியது பழையவை