முன்னாள் இராஜாங்க அமைச்சர் சிவநேசதுரை சந்திரிகாந்தனை பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் 72 மணித்தியாலங்கள் தடுத்து வைத்து விசாரிக்கப்படவுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.
மட்டக்களப்பில் உள்ள அவரது அலுவலகத்தில் வைத்து நேற்று(08.04.2025) இரவு குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் சிவநேசதுரை சந்திரிகாந்தன் கைது செய்யப்பட்டார்.
கைது செய்யப்பட்ட சிவநேசதுரை சந்திரிகாந்தன், இன்று (09-04-2025)காலை குற்றப் புலனாய்வு திணைக்களத்திற்கு அழைத்து வரப்பட்டார்.
காணாமல் ஆக்கப்பட்ட பேராசிரியர்
கிழக்குப் பல்கலைக்கழகத்தின் முன்னாள் உபவேந்தரான பேராசிரியர் சிவசுப்பிரமணியம் ரவீந்திரநாத் கடத்தப்பட்டு காணாமல் ஆக்கப்பட்டமை தொடர்பிலேயே அவர் கைது செய்யப்பட்டிருந்தார்.
பேராசிரியர் சிவசுப்ரமணியம் ரவீந்திரநாத் 2006ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 15 ஆம் திகதி கொழும்பு 07, வித்யா மந்திரில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் பங்குபற்றிய போது கடத்தப்பட்டார். அப்போது அவரது வயது 55 என்பது குறிப்பிடத்தக்கது.