இலங்கை விமானப்படையின் பெல் 212 உலங்குவானூர்தி இன்று (09-05-2025) காலை மதுரு ஓயா பகுதியில் விழுந்து விபத்துக்குள்ளானது.
ஹிங்குரக்கொட விமானப்படை தளத்தில் இருந்து புறப்பட்டு மதுரு ஓயா பகுதிக்கு சென்று கொண்டிருந்த போது விபத்துக்குள்ளானது.
குறித்த உலங்குவானூர்தியில் இரண்டு விமானிகள் உட்பட 12 பேர் இருந்துள்ளனர். இதுவரை விமானிகள் உட்பட 10 பேர் உயிருடன் மீட்கப்பட்டுள்ளதாக விமானப்படை தெரிவித்துள்ளது.
ஹிங்குராக்கொட விமானப்படை தளத்தில் இலங்கை விமானப்படையின் பயிற்சி நிறைவு நிகழ்ச்சி நடைபெற்றமை குறிப்பிடத்தக்கது.
மீட்புபணியின் போது இரண்டு விமானிகள் உட்பட பயணித்த 12 படையினரும் உயிருடன் மீட்கப்பட்டனர் - இலங்கை விமானப்படை தெரிவித்தனர்.