மட்டக்களப்பு மாவட்டம் ஏறாவூர் பற்று பிரதேச சபை தேர்தலில் போட்டியிட்டு அதிக வாக்குகளைப் பெற்ற சிரேஷ்ட ஊடகவியலாளர் செல்வகுமார் நிலாந்தன் இன்றைய தினம் இராஜினாமா செய்கின்றார்.
வணக்கம் அன்பான தமிழ் மக்களே எனது 22 வருட ஊடகம் மற்றும் சிவில் சமூக செயற்பாட்டில் இருந்து கட்சி அரசியலுக்குள் காலடி எடுத்து வைத்ததை ஏற்றுக் கொண்டு எனக்காக இரவு பகல் பாராது தமிழரசுக் கட்சியின் வீட்டு சின்னத்திற்கு வாக்களித்து.
இம்முறை ஏறாவூர் பற்று பிரதேச சபை பிரிவில் அதிகூடிய வாக்குகளை பெற்று அனைவருக்கும் எனது மனமார்ந்த நன்றிகள் என் மீது நம்பிக்கை வைத்த செங்கலடி, ரமேஸ்புரம், கணபதி நகர்,பிள்ளையாரடி வட்டாரம், ஐயன்கேணி, பாரதிபுரம், விபுலானந்த புரம், மணியபுரம் மற்றும் தளவாய் கிராமங்களைச் சேர்ந்த மக்கள் பெறாதறவினை வழங்கி இருந்தீர்கள்.
என்னதான் நாம் கட்சியின் வெற்றிக்காக மிகக் கடினமான உழைப்பை கொட்டிக் கொடுத்து அதிகூடிய வாக்குகளை பெற்றிருந்தாலும் தமிழரசுக் கட்சி அதனை கிஞ்சித்தும் கணக்கெடுக்க வில்லை.....?