வெள்ளவத்தையில் பொலிஸார் பாதுகாப்பிற்கு மத்தியில் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் - சிங்கள ராவய இடையூறு


தமிழ் இன அழிப்பின் 16 வது நினைவேந்தல் இன்று கொழும்பு வெள்ளவத்தை கடற்கரையில் தீபச் சுடர் ஏற்றி உணர்வு பூர்வமாக அனுஷ்டிக்கப்பட்டது.

நினைவேந்தலில் பொதுமக்கள் கலந்து கொண்டு உயிர் நீத்தவர்களுக்கு தீபச் சுடர் ஏற்றி அனுஷ்டித்தனர். அதனை தொடர்ந்து முள்ளிவாய்க்கால் கஞ்சியும் அனைவருக்கும் வழங்கப்பட்டது.

இதன்போது சிங்கள ராவய எனும் அமைப்பை சேர்ந்தவர்கள் அந்த இடத்திற்கு வருகை தந்து தங்களது எதிர்ப்பை வெளியிட்டுள்ளனர்.

எனினும் பொலிஸாரின் கடும் பாதுகாப்புக்கு மத்தியில் இவ் நிகழ்வு இடம்பெற்றது.

புதியது பழையவை