அமெரிக்காவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்!



அமெரிக்காவின் டெக்சாஸின்  எல் பாசோ நகருக்கு அருகில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

மெக்சிகோ மற்றும் வடக்கு மெக்சிகோவின் சில பகுதிகளில் 5.2 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் உணரப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஏற்பட்ட 46 சிறிய நிலநடுக்கங்களில்...
டெக்சாஸின் பெக்கோஸுக்கு மேற்கே சுமார் 50 மைல் தொலைவில் இந்த நிலநடுக்கம் மையம் கொண்டிருந்ததாக குறிப்பிடப்பட்டுள்ளது.


இந்தப் பகுதியில் மக்கள் தொகை குறைவாக இருப்பதால், சில குடியிருப்பாளர்களே பாதிக்கப்பட்டுள்ளதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

ஏப்ரல் மாத தொடக்கத்தில் இருந்து இந்தப் பகுதியில் ஏற்பட்ட 46 சிறிய நிலநடுக்கங்களில் இந்த நிலநடுக்கமும் ஒன்று என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
புதியது பழையவை