முள்ளிவாய்க்கால் கஞ்சி எனப்படும் இறுதி யுத்தத்தின் போது மக்களின் அவலங்களை வெளிப்படுத்தும் தமிழின அழிப்பு வாரமாக(12-05-2025)-(18-05-2025) ஆம் திகதி வரைக்கும் வடக்கு கிழக்கு உள்ளிட்ட தமிழர்கள் வாழும் பகுதிகளில் உணர்வூர்வமாக இடம் பெற்று வருகின்றது.
அந்த வகையில் தமிழர் தேசம் வாழும் மட்டக்களப்பு போரதீவுப்பற்று களுமுந்தன்வெளி விநாயகர் விளையாட்டுக் கழகம் இன்று (17-05-2025) ஆம் திகதி சித்திரை விளையாட்டுப் போட்டி இடம் பெறுகின்றன.
இது தமிழ் தேசத்திற்காக போராடியும் அப்பாவி தமிழ் மக்களை இலங்கை ராணுவம் கொன்டு குவித்த நாளாகும்.
இன்றைக்கு விளையாட்டுப் போட்டி நாடாத்துகின்ற நீங்கள் தமிழர்களுக்கு செய்யும் துரோகம் செய்யும் நாளாகும்.
இக் கிராமம் தமிழீழ போராட்டத்தில் பல போராளிகளை தந்த மண்.மண்ணுக்காக செத்து மடிந்த பூமி.
கல்வி மான்கள்,புத்திஜீவிகள்,தமிழீழ தலைவர்களை உருவாக்கிய கிராமம் நீங்கள் ஒரு கணம் சிந்தித்து பாருங்கள் இன்றைக்கு விளையாட்டு நிகழ்வுகள் கட்டாயம் நடாத்தவேன்டுமா...?
இதனை பார்க்கும் போது வேதனையளிக்கின்றன என புத்திஜீவிகள் தெரிவிக்கின்றன.
இலங்கைத் தமிழர் இனப்படுகொலை அல்லது ஈழத்தமிழர் இனப்படுகொலை என்பது பெரும்பான்மை பேரினவாத சிங்கள அரசு கலவரங்களை ஏற்படுத்தியும், வானூர்திகளில் இருந்து கண்மூடித்தனமாக குண்டு வீசியும், எறிகணைகளை வீசியும், நேரடியாகச் சுட்டும், சித்திரவதை செய்தும் ஈழத்தமிழர்களை படுகொலை செய்யும் இனவழிப்பைக் குறிக்கும். குறிப்பாக தமிழர்களின் நியாயமான பிரச்சினைகளுக்கு எவ்வித நடைமுறைத் தீர்வுகளையும் முன்வைக்காது, பொது மக்களைப் பொருட்படுத்தாது மேற்கொண்டுவரும் போரில் ஆயிரக்கணக்கில் பொதுமக்கள் கொல்லப்படுதலைக் குறிக்கிறது. 2009 போரில் மட்டும் சுமார் 1,50000 மக்கள் கொல்லப்பட்டனர் .