இலங்கை தமிழரசுக் கட்சியின், மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ஞானமுத்து சிறிநேசன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
ஞானமுத்து சிறிநேசன், நேற்று (16.05.2025) மாலை 7.00 மணியளவில் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட, நாடாளுமன்ற உறுப்பினர் சிறிநேசனுக்கு அன்றிரவு 10 மணியளவில் சத்திரசிகிச்சை ஒன்று மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இதனை தொடர்ந்து அவர், வைத்தியசாலையில் 10 ஆம் இலக்க விடுதியில் சிகிச்சை பெற்று வருகின்றார்.
அரச சேவை
பொதுவாக, சாதாரண மக்களுக்கான இடமாகவே அரச வைத்தியசாலைகள் பார்க்கப்படுகின்றன.
வசதி படைத்தவர்களும், அரசியல்வாதிகளும் அரச வைத்தியசாலைகளில் சிகிச்சை பெறுவது அரிதான விடயமாகவே காணப்படுகின்றது.
அரசாங்கத்தில் வேலை செய்பவர்களே, தமக்கான சிகிச்சை, தமது குழந்தைகளுக்கான கல்வி எனும் போது தனியார் துறைகளை தேர்ந்தெடுப்பது தொடர்ச்சியாக இடம்பெற்று வருகின்றது.
இந்நிலையில், நாடாளுமன்ற உறுப்பினர் ஞானமுத்து சிறிநேசனின் செயல் அரச சேவைகளை மதிப்பதற்கான ஓர் முன்மாதிரியான செயலாக பார்க்கப்படுகின்றது.