கட்சி பிரதிநிதிகள் என்று பார்க்காமல் சாணக்கியனால் தனது பிரதிநிதிகளுக்கு மாத்திரம் பதவி வழங்கப்பட்டு வருகின்றது.
மட்டக்களப்பு மாவட்டம் கல்குடா தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் வைத்தியர் சிறிநாத், உறுப்பினர் ஸ்ரீநேசன் மற்றும் யோகேஸ்வரன் ஐயாவின் பிரதிநிதிகள் என்ற போர்வையில் புறக்கணிக்கப்பட்டு பழி வாங்கப்பட்டுள்ளனர்.
நடை பெற ஆரம்பித்துள்ளது, பிள்ளையானை தோற்கடித்த வாழைச்சேனை மற்றும் பேத்தாளையை முழுமையாக புறக்கணித்து சாணக்கியனின் எடுபிடியை தவிசாளராக நியமித்துள்ளனர்.
வாழைச்சேனை தவிசாளராக சாணக்கியன் சகாவை நியமிப்பதற்கு கட்சிக்குள் ஆதரவாக கருத்துக்களை முன்வைப்பதற்கு ஒவ்வெருவருக்கும் 20 000 ரூபா வழங்கப்பட்டுள்ளது.
நேற்று (08-05-2025)தெரிவு முடிந்த பின்னர் பாசிக்குடாவில் மது விருந்து வழங்கப்பட்டுள்ளதை ஊடகவியலாளர் உருத்திரன் உறுதிப்படுத்தியுள்ளார்.
முதல் முறையாக என்னை விமர்சித்து எழுத வைத்து விட்டார்கள் என ஊடகவியலாளர் தர்சனும் சமூகவலைத்தளத்தில் பதிவிட்டுள்ளார்.