2009, மே, 18, முள்ளிவாய்கால் இனப்படுகொலை, போர் மௌனம் இடப்பெற்று தொடர்ச்சியாக ஒருவருடங்களாக இராணுவத்தினருடைய கெடுபிடிகள் அச்சுறுத்தல் வடகிழக்கு எங்கும் தொடர்ந்த வண்ணம் இருந்தன.
இதனால் முதலாம் ஆண்டு நினைவு வணக்கம் எந்த இடத்திலும் செய்யக்கூடிய சூழல் இருக்கவில்லை.
ஆனால் 2010, மே,18, 19, ஆகிய இரண்டு தினங்கள் முதலாம் ஆண்டு முள்ளிவாய்க்கால் நினைவு வணக்கம் மட்டக்களப்பு மாவட்டத்தில் மட்டுமே அப்போது தமிழ்த்தேசிய கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர்களாக இருந்த பொ.செல்வராசா, பா.அரியநேத்திரன், சீ.யோகேஸ்வரன் ஆகிய நாம் மூவரும் குறைந்தளவான மக்களை அழைத்து நினைவு கூர்ந்தோம்.
முதலாவது வது ஆண்டு நிகழ்வு இரண்டு இடங்கள் இரண்டு நாட்கள் நினைவு கூரப்பட்டன.
🪔18/05/2010ல்
கொக்கட்டிச்சோலை ஶ்ரீதான்தோன்றீஷ்வரர் ஆலயத்தில் விசேடபூசை,திருவாசகம் முற்றோதல் அன்னதானம்,என்பன செய்யப்பட்டன.
🪔19/05/2010,மட்டக்களப்பு மாமாங்கேஷ்வர்ர் ஆலயத்தில் உயிர்நீத்த அனைவரினதும் ஆத்மா சாந்தி வேண்டி பெரும் நினைவு பூசையுடன் அமிர்தகழி தீர்தக்கேணியில் பிண்டங்கள் கரைத்து பெரும் வேழ்விப்பூசை அன்னதானம் நினைவுரைகள் இடம்பெற்றன.
👉🏼இரண்டாவது ஆண்டு நினைவுதான் வடகிழக்கில் பல இடங்களில் 2011, மே,18, ல் பல இடங்களில் முள்ளிவாய்காலில் செல்ல தடையிருந்தும் பல இடங்களில் நினைவு கூரப்பட்டது.
மூன்றாம் ஆண்டு 2012, தொடக்கம் மே,12, தொடக்கம் மே,18 வரை முள்ளிவாய்க்கால் கஞ்சி வழங்கும் நிகழ்வு வடகிழக்கு எங்கும் தொடங்கப்பட்டது.
2014,மே,18, ல் தான் ஐந்தாவது ஆண்டு நிகழ்வை முள்ளிவாய்க்கால் முற்றத்தில் சென்று நிகழ்வு நடத்தும் சூழ்நிலை உருவானது. அதற்கு முன்னம் நான்கு ஆண்டுகளும்(2010, 2011,2012,2013) முள்ளிவாய்க்கால் முற்றத்தில் மக்கள் செல்ல இராணுவம் அனுமதிக்கவில்லை.
2014,மே,18, தொடக்கம் இன்று 2025, வரை முள்ளிவாய்க்கால் முற்றத்தில் மக்கள் பெருந்திரளாக கூடி சுடர் ஏற்றி வணக்க அஞ்சலி செலுத்தும் நடைமுறை பின்பற்றப்படுகிறது.
அதுவரையும் முள்ளிவாய்க்கால் நிலத்தில் செல்லாமலேயே பொது இடங்களிலும், வழிபாட்டுத்தலங்களிலும் வீடுகளிலும் மக்கள் முள்ளிவாய்க்கால் நினைவு வணக்கம் செய்யதிருந்தனர்.
அது தொடர்ச்சியாக ஒவ்வொரு வருடமும் தற்போது 2025 வரை தொடர்ந்து இடம்பெற்று வருவது குறிப்பிடத்தக்கது.
-பா.அரியநேத்திரன்-
13/05/2025.
🪔♨️🪔♨️🪔♨️🪔♨️🪔♨️🪔