வண்டிலில் ஏரிய தமிழரசுக் கட்சி! உதவி தவிசாளர் பதவி வண்டிலுக்காம் கழுதை தேய்ந்து கட்டெரும்பான கதை!



மட்டக்களப்பு ஏறாவூர் பற்று பிரதேச சபையில் ஆட்சியமைப்பதற்கு தமிழரசுக் கட்சிக்கு   போதிய பெரும்பான்மை இல்லாத நிலையில்  ஏனைய கட்சிகளைச் சேர்ந்த ஐந்து பேரை அழைத்து ஆட்சியமைக்கலாம்  என கனவு கண்ட தமிழரசுக் கட்சியில் உள்ள சிலருக்கு இப்போது ஆதரவைப் பெற முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில் தங்களது கட்சிக்கு எதிராக செயற்பட்டு தங்களது கட்சி உறுப்பினரை தோற்கடித்த  மாட்டு வண்டிலில்  ஏறுவதற்கு தயாராகி வருகின்றனர்.

அதுவும் மாட்டு வண்டி சின்னத்திற்கு உப தவிசாளர் பதவி வழங்கப்பட உள்ளதாம்.

இதேவேளை ஏறாவூர் பற்று பிரதேச சபையின் ஆட்சியை கைப்பற்ற பலர் தயாராகி வருகின்றனர்.

குறிப்பாக NPP கட்சியினர் ஆட்சியை கைப்பற்ற பல முயற்சிகளை செய்து வருவதாக தெரிகிறது.
புதியது பழையவை