இன்று (23-06-2025)அதிகாலை மட்டக்களப்பு வந்தாறுமூலை பகுதியில் இடம்பெற்ற கார் விபத்தில் சிக்கி 15 வயதுச்சிறுமி உட்பட இருவர் உயிரிழந்துடன், பெண்ணொருவர் படுகாயமடைந்துள்ளார்.
ஏறாவூர் பொலிஸ் பிரிவிலுள்ள வந்தாறுமூலையிலிருந்து களுவங்கேணி நோக்கி பயணித்த கார் வீதி இரண்டாவது மைற்கல்லில் வேககட்டுப்பாட்டை மீறி வீதியை விட்டு விலகி பனை மரத்துடன் மோதிய விபத்தில் காரை செலுத்திச்சென்றவர் மற்றும் 15 வயது சிறுமி உட்பட இருவர் உயிரிழந்ததுடன், பெண் ஒருவர் படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட சம்பவம் இன்று திங்கட்கிழமை (23-06-2025) அதிகாலை 4.45 மணிக்கு இடம்பெற்றுள்ளதாக பொலிசார் தெரிவித்தனர்.
மட்டக்களப்பு சின்ன ஊறணி கருவப்பங்கேணி செலியன் வீதி இரண்டாம் குறுக்கைச்சேர்ந்த ஜெந்திரகுமார் சஞ்சய், கருவப்பங்கேணி மற்றும் நாவலர் வீதியைச்சேர்ந்த 15 வயதுச்சிறுமியான பிரதீபன் தவஸ்வாணி ஆகிய இருவரும் உயிரிழந்துள்ளனர்.
இச்சம்பவத்தில் படுகாயமடைந்த பெண்ணின் கணவர் வெளிநாட்டிலிருந்து வரும் நிலையில் உயிரிழந்த சிறுமியான மகளுடன் கருவப்பங்கேணியிலுள்ள அவர்களது பன்றி வளர்க்கும் பண்ணையைப் பார்ப்பதற்காக சம்பவ தினமான இன்று அதிகாலை கார்ச்சாரதியுடன் பயணித்த போது கார் வேகக்கட்டுப்பாட்டை மீறி பனை மரத்துடன் மோதி விபத்துக்குள்ளானதில் சாரதியும் 15 சிறுமியும் உயிரிழந்துள்ளதுடன், படுகாயமடைந்த சிறுமியின் தாயாரான பாலச்சந்திரன் மோகனகாந்தி மட்டக்களப்புபோதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இதில் உயிரிழந்தவர்களின் சடலம் மட்டு.போதனா வைத்தியசாலை பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளதுடன், இது தொடர்பான மேலதிக விசாரணைகளை ஏறாவூர் பொலிஸ் நிலைய போக்குவரத்து பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர்.


