போலி மருத்துவ சான்றிதழ் வழங்கிய வைத்தியர் கைது, ஒவ்வொரு அறிக்கைக்கும் $300 வசூல்



திருகோணமலை துறைமுகம் வழியாக வருகை தரும் பயணிகளுக்கு தேவையான மருத்துவ பரிசோதனைகள் மேற்கொள்ளப்படாமலே, பொய்யான மருத்துவ சான்றிதழ்கள் வழங்கப்பட்டதாக கூறப்படும் விவகாரத்தில் கிண்ணியா வைத்தியசாலையுடன் இணைந்த வைத்தியர் ஒருவரை குற்றப் புலனாய்வுப் பிரிவு (CID) அதிகாரிகள் கைது செய்துள்ளனர்.

தகுந்த முறைப்பாட்டின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட விசாரணையிலேயே இந்த கைது இடம்பெற்றது.

காவல்துறையின் தகவலின்படி, இவர் துறைமுகத்தில் கப்பலில் இருந்து இறங்கும் பயணிகளை பரிசோதித்து, அவர்களுக்கு மருத்துவ அனுமதி சான்றிதழ் வழங்கும் பொறுப்பில் இருந்தார். ஆனால், எந்தவித மருத்துவ பரிசோதனையும் செய்யாமலேயே, ஒவ்வொரு அறிக்கைக்கும் 300 அமெரிக்க டாலர் வாங்கி, போலி சான்றிதழ்கள் வழங்கியதாகத் தெரியவந்துள்ளது.

அவர் பெற்ற பணம் மற்றும் வழங்கிய போலி ஆவணங்கள் பற்றிய ஆதாரங்களை அதிகாரிகள் உறுதிப்படுத்தியுள்ளனர். 

சந்தேகநபர் தற்போது காவலில் வைக்கப்பட்டுள்ளார். மேலதிக விசாரணைகள் தொடருகின்றன.
புதியது பழையவை