வரலாற்று சிறப்புமிக்க மட்டக்களப்பு ஆரையம்பதியில் மாதரசி கண்ணகியின் வைகாசி திருச்சடங்கு விழா கடந்த செவ்வாய்க்கிழமை (03-06-2025)ஆரம்பிக்கப்பட்டு எதிர்வரும் புதன்கிழமை(11-06-2025) கதவடைத்தல் நிகழ்வுடன் வருடாந்த திருச்சடங்கு இனிதே நிறைவுபெறவுள்ளது.
இவ்வருடாந்த திருச்சடங்கில் அம்மன் எழுந்தருளல் பண்ணல்,கும்ப ஊர்வலம்,கலியாணக்கால் வெட்டுதல்,கூறைதாலிச்சடங்கு,அதிகாலை கலியாணச்சடங்கு,பச்சைகட்டி சடங்கு,கப்பல்சடங்கு,குளிர்த்தி பாடுதல் உட்பட தினமும் அதிகாலைச்சடங்கும்,மாலைச்சடங்கும் கண்ணகியம்மன் ஆலய பிரதமர் பூசகர் த.தட்சணாமூர்த்தி தலைமையில் நடைபெறவுள்ளது.
இந்த உற்சவ காலத்தில் அடியார்கள் கற்பூரச்சட்டி எடுத்தல்,காவடி எடுத்தல்,அங்கபிரதசனம் எடுத்தல்,மற்றும் அம்பாளுக்குரிய நேர்த்திக்கடன் பொருட்களை ஒப்படைத்து பிணி நீங்கி இன்புற்று வாழ்வதற்கு கண்ணகி அம்பாள் அருள்பாலித்து காத்தருளுவாள் என்பது கிராமியத் தெய்வ வழிபாட்டின் சிறப்பம்சமாகும்.